சென்னை மாநகர காவல் துறை கட்டுப்பாட்டு அறை அலுவலகத்திற்கு நேற்று ஒரு மர்ம நபர், இந்த குண்டு மிரட்டலை விடுத்தார். விமான நிலையத்தில் சோதனையிட்டதில் அது புரளி என தெரியவந்தது.
கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தபோது, அது தஞ்சாவூர் பகுதியில் இருந்து வந்தது தெரிந்தது. தஞ்சாவூர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
அந்த செல்போன் எண், சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரிடம் இருந்தது. மேலும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசியதாக கூறப்படுகிறது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ரூ.1 கோடி அபராதம் என்ற எச்சரிக்கையை மீறி சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: 80 வயது முதியவரிடம் விசாரணை appeared first on Dinakaran.