அதற்கு, அருகில் இருந்த தெரியாத நபர்கள் சூடாக டீ உள்ளது என கூறியுள்ளார்.
இதனால், இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தெரியாத நபர்கள், வழக்கறிஞர் சக்திவேலை கை மற்றும் கல்லால் அடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில், படுகாயம் அடைந்த சக்திவேல், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் போலீசார், வழக்கறிஞரை தாக்கிய மொண்டியம்மன் நகர், வ.உ.சி தெருவை சேர்ந்த குமார் (30), பாடியநல்லூர் பாலகிருஷ்ண நகரை சேர்ந்த மதன் மோகன்ராஜ் (36) ஆகிய 2 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வழக்கறிஞரை தாக்கிய 2 பேர் கைது appeared first on Dinakaran.