அமெரிக்காவில் ராணுவத்துக்கு ரூ.75 லட்சம் கோடி: அதிபர் பைடன் ஒப்புதல்

வாஷிங்டன்: அமெரிக்காவின் பாதுகாப்பு மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், ஒட்டுமொத்த ராணுவ செலவை ரூ.75 லட்சம் கோடியாக (895 பில்லியன் டாலர்) அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இளம் ராணுவ வீரர்களுக்கு 14.5% ஊதிய உயர்வும் மற்றவர்களுக்கு 4.5% ஊதிய உயர்வும் மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பது போல, தைவானுக்கும் ஆயுதம் உள்ளிட்ட உதவிகள் மேற்கொள்ள நிதித் தொகுப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. செனட் , பிரதிநிதிகள் அவையில் இந்த மசோதா நிறைவேறியதை தொடர்ந்து ஒப்புதல் வழங்கி அதிபர் பைடன் நேற்று கையெழுத்திட்டார்.

The post அமெரிக்காவில் ராணுவத்துக்கு ரூ.75 லட்சம் கோடி: அதிபர் பைடன் ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: