- மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் அஷ்டமி சப்ரா விழா கோலகலம்
- மதுரை
- தேவன்
- அஷ்டமி சப்ரா
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
- அஷ்டமி சபர்ரா
- மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
- மதுரை மீனாக்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்ரா திருவிழா கோலகலம்
மதுரை: அனைத்து உயிர்களுக்கும் இறைவன் உணவளிக்கிறார் என்னும் தத்துவத்தை விளக்கும் வகையில், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்று அஷ்டமி சப்பர விழாவாகும். உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படி அளக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதன்படி இந்தாண்டு விழா மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளான இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 5.30 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் அஷ்டமி சப்பரங்களில் எழுந்தருளி மாசி மற்றும் வெளி வீதிகளில் உலா வந்தனர்.
இதையொட்டி காலையிலேயே திரண்ட பக்தர்கள் சுவாமி, அம்மன் தேர்களை வடம் பிடித்து இழுத்து வந்தனர். அம்மன் சப்பரத்தை பெண் பக்தர்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து வந்தனர். சுந்தரேஸ்வரர் சுவாமி மற்றும் பிரியாவிடை அஷ்டமி சப்பரத்திலும், மீனாட்சி அம்மன் மற்றொரு சப்பரத்திலும் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி, கயிலாய வாத்தியம் முழங்க வெளிவீதிகளில் உலா வந்தனர். அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படி அளக்கிறார் என்னும் தத்துவத்தை உணர்த்தும் வகையில், சாலைகளில் தூவப்பட்டிருந்த அரிசி மணிகளை, பக்தர்கள் இறைவனின் பிரசாதமாக கருதி எடுத்துச் சென்றனர்.
The post மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா கோலாகலம் appeared first on Dinakaran.