சென்னை: புதிய அணுக்கனிம சுரங்க திட்டத்தை செயல்படுத்த விடமாட்டோம் என்று விஜய்வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார். மணவாளக்குறிச்சியில் இந்திய அரிய மணல் ஆலை நிறுவனத்தின் புதிய அணுக்கனிம சுரங்க திட்டத்துக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அணுக்கனிம சுரங்க திட்டத்துக்கு அனுமதி தரக் கூடாது என்று நாடாளுமன்றத்திலும் வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்தார்.