- விஜய்
- மார்க்சிஸ்ட்
- கோவா
- தமிழ்நாடு அரசு
- அக்காட்
- யு.
- வாசுகி
- 24 வது காங்கிரஸ்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
- கட்சி
- தின மலர்
கோவை: டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசின் தீர்மானம் வரவேற்கத்தக்கது. நடிகர் விஜய், வொர்க் ஃபிரம் ஹோம் அரசியல் செய்கிறார் என கோவையில் நடந்த மார்க்சிஸ்ட் மாநாட்டில் அக்கட்சி தலைவர்களில் ஒருவரான உ.வாசுகி பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது கோவை மாவட்ட மாநாடு கோவை வரதராஜபுரம் பகுதியில் உள்ள மண்டபத்தில் நேற்று துவங்கியது. இதில், அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி துவக்க உரையாற்றியதாவது:
இந்தியாவில் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜ தனது சொந்த காலில் நிற்க முடியாமல், பிற கூட்டணி கட்சிகளை சார்ந்துதான் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை வந்துள்ளது. பாஜ அரசு கார்பரேட் ஆதரவு மற்றும் வகுப்புவாத கொள்கையை கடைபிடிக்கும் அரசாக உள்ளது. பல இடங்களில் சிறுபான்மையின மக்கள் குறிவைத்து தாக்கப்படுகிறார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஜனநாயக விரோதமானது. மாநில உரிமைகளுக்கு எதிரானது. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கக்கூடாது என தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
பாசிசத்திற்கும், பாயாசத்திற்குமே வித்தியாசம் தெரியாத தவெக தலைவர் விஜய், ஆட்சியை பிடித்தால் என்ன செய்வார் என நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது. ஒரு கம்பெனிக்கு வொர்க் பிரம் ஹோம் பண்ணலாம். அரசியலில் வொர்க் பிரம் ஹோம் பண்ண முடியாது. களத்திற்கு வந்து வேலை செய்யும் இயக்கமாக மார்க்சிஸ்ட் கட்சி இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து நேற்று மாலை உழைப்பாளர் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
The post ‘வொர்க் ஃபிரம் ஹோம்’ அரசியல் செய்கிறார் விஜய்: மார்க்சிஸ்ட் தலைவர் தாக்கு appeared first on Dinakaran.