கடத்தூர், டிச.21: கடத்தூர் பஸ் நிலையம் எதிரே, அம்பேத்கர் சிலை முன்பு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்ட குழு சார்பில், அம்பேத்கரை அவதூறாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், பகிரங்க மன்னிப்பு கேட்டு பதவி விலக வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் குப்பன் தலைமை வகித்தார். வட்ட தலைவர் குமரேசன், வட்ட துணை தலைவர் முனியப்பன், துணை செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட தலைவர் குறளரசன், மாவட்ட செயலாளர் அருள்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். வட்ட பொருளாளர் ராகப்பிரியா நன்றி கூறினார்.
The post வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.