×

நீலகிரி யானை வழித்தட விவகாரத்தில் முந்தைய தீர்ப்பில் மாற்றம் செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு தடை விதித்தது. மேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நிலம், விடுதிகள் ஆகிய உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஒரு அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்திரவிற்கு எதிராக பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள், விவசாயிகள், பொதுநல அமைப்புகள் மற்றும் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி படுத்தியது.

இந்நிலையில் நீலகிரி யானைகள் வழித்தடம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்திருந்த உத்தரவில் சில மாற்றங்களை செய்யக்கோரி சில பொதுநல அமைப்புகள், கட்டிட உரிமயாளர்கள் உட்பட சிலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த விளக்க மனுக்களானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில்,

‘‘சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அதேப்போன்று நாட்டின் காடுகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கவும் அரசியலமைப்பு விதிகள் அரசுகளுக்கு தெளிவான ஆணைகளை பிறப்பித்து உள்ளது. எனவே நீலகிரி யானைகள் வழித்தடம் தொடர்பான விவகாரத்தில் கடந்த 2020ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது என்று வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

The post நீலகிரி யானை வழித்தட விவகாரத்தில் முந்தைய தீர்ப்பில் மாற்றம் செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Supreme Court ,New Delhi ,Madras High Court ,Masinakudi ,Mudumalai Sanctuary ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED ஜாபர் சேட் விவகாரத்தில் முடித்து...