×

போச்சம்பள்ளி பகுதியில் பனங்கிழக்கு விளைச்சல் அமோகம்

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி, மத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பனங்கிழங்கு அறுவடை தீவிரமைந்துள்ளது. பனை தமிழ்நாட்டின் மாநில மரம் மட்டும் அல்ல தமிழர்களின் அடையாளம். பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்க இலக்கியங்கங்களையும், சித்தமருத்துவ குறிப்புகளையும் தாங்கி பனை ஓலைச்சுவடிகள் தமிழர்களின் தொன்மையும் நாகரிகத்தையும், உலகறிய செய்தவை.

பனையிலிருந்து கிடைக்கும் ஒரு பொருளும் வீணாவது இல்லை. பதநீர், நுங்கு, பனம் பழம், பனங்கிழங்கு என பனை மரத்தில் அனைத்து பாகங்களுமே மக்களுக்கு பயனளிக்க கூடியவை. போச்சம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பனங்கிழங்கு மகசூல் அதிகரித்துள்ளது.

பனங்கொட்டையை பத்து அடி நீளம், பத்து அடி அகலத்துக்கு பார்த்தி கட்டி கொண்டு அதனுள் அரை அடி ஆழத்துக்கு குழி தோண்டி, அதற்குள் பனம்பழம் விதைகளை நெருக்கமாக அடுக்கி வைத்து, பாத்தி ஓரங்களில் மண்ணை போட்டு மூடி விட்டு, மேல் பரப்பில் பரவலாக மண்ணை தூவி தண்ணீர் தெளிந்து விடுவர்.

அதனை தொடர்ந்து மழை காலத்தில் பூமிக்குள் புகும் நிலத்தடி நீரை உறிஞ்சி, தானாகவே கிழங்கு விளையும். பனங்கிழங்கு நன்றாக விளைச்சல் ஆவதற்கு 75 நாட்கள் முதல் 90 நாட்களில் முக்கால் விளைச்சல் ஆகி இருக்கும். புட்டாசி, ஐப்பசி மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும். அதை குழி தோண்டி எடுத்து வேக வைத்து விற்பனைக்கு எடுத்து செல்வர்.

பனங்கிழங்கில் பல மருத்துவ குணம் உள்ளது. இவை குளிர்ச்சி தன்மை உடையது. தற்போது ஆயிரக்கணக்கான பனை தொழிலாளர்கள் பனங்கிழங்கை அறுவடை செய்து வேக வைத்து, மக்கள் கூடும் பகுதிகளுக்கு எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பனை தொழிலாளர்களுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.

வெளிமாநிலங்களுக்கு செல்லும் பனங்கிழங்குபோச்சம்பள்ளி, மத்தூர் பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பனல்கிழங்கு பாண்டிசேரி, பெங்களூர் மாநிலங்களுக்கும் மற்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், உள்ளிட்ட பல்வேறு மாவட்ட வியாபாரிகள் நேரில் வந்து பனங்கிழங்கை விலை பேசி வாங்கி, டெம்போ மூலம் எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

The post போச்சம்பள்ளி பகுதியில் பனங்கிழக்கு விளைச்சல் அமோகம் appeared first on Dinakaran.

Tags : Pochampally ,Mathur ,Tamil Nadu ,Siddhamaruthu ,
× RELATED இரும்பு பெட்டி வெடித்ததில் மேலும் ஒருவர் பலி