- வடக்கு மாவட்ட தி.மு.க.
- அமித் ஷா
- தண்டாயர்பேட்டை
- சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க
- யூனியன்
- உள்துறை அமைச்சர்
- அம்பேத்கர்
- AE கோயில் தெரு
- புடு வன்னார்பேட்டை
- பெரம்பூர்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஆர்.டி.சேகர்
- எபினேசர்
- தின மலர்
தண்டையார்பேட்டை: அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் புதுவண்ணாரப்பேட்டை ஏ.இ.கோயில் தெருவில் நேற்று மாலை நடந்தது. பெரம்பூர் எம்எல்ஏ ஆர்.டி.சேகர் தலைமை வகித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி மற்றும் பகுதி செயலாளர்கள் லட்சுமணன், ஜெபதாஸ் பாண்டியன், செந்தில்குமார், வ.பெ.சுரேஷ், ஜெயராமன், முருகன், மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் மருது கணேஷ், பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் நரேந்திரன், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், பெரம்பூர் தொகுதி பொறுப்பாளர் ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அமித்ஷாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
* உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பகுதி செயலாளர்கள் ராஜசேகர், முரளி, துறைமுகம் தொகுதி பொறுப்பாளர் நரேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மண்டல குழு தலைவர் ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள் பரிமளம், ஆசாத், வட்ட செயலாளர்கள் திமுகவினர் ஏராளமானவர் கலந்துகொண்டனர்.
* விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் முன்னாள் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ரா.செல்வம் தலைமை வகித்தார். வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் உஷாராணி, மாமன்ற உறுப்பினர் அம்பேத் வளவன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர், ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை புளியந்தோப்பு துணை கமிஷனர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தனர்.
வேளச்சேரி: புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மேடவாக்கம் பேருந்து நிலையம் அருகே, ஒன்றிய செயலாளர் கோவிலம்பாக்கம் ஜி.வெங்கடேசன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பரங்கிமலை ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள், முன்னோடிகள் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
The post அமித்ஷாவை கண்டித்து வடக்கு மாவட்ட திமுக ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.