×

அமித்ஷாவை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

சென்னை: நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் பெயரை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவது தொடர்பாக பேசியது சர்ச்சையான நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்திலும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்தது. சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் சென்னை அண்ணா சாலையில் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜசேகரன், மாநில துணை தலைவர் டாக்டர் விஜயன், மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன், மாநில பொது செயலாளர்கள் தளபதி பாஸ்கர், வீரபாண்டியன், ஆர்டிஐ பிரிவு துணைத் தலைவர் மயிலை தரணி, கலை பிரிவு நிர்வாகிகள் சூளை ராஜேந்திரன், சந்திரசேகர், மா.வே.மலைய ராஜா மாநில செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

The post அமித்ஷாவை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,DISTRICT ,AMITSHAH ,Union Interior Minister ,Amitsha Ambedkar ,Congress party ,Union Home Minister ,Amitsha ,Chennai District Congress ,Dinakaran ,
× RELATED அமித்ஷாவுக்கு எதிராக உயர் நீதிமன்ற வக்கீல்கள் போராட்டம்