சென்னை: கார்த்தி நடித்த சகுனி படத்தை இயக்கியவர் சங்கர் தயாள். 2012ல் வெளிவந்த அந்த படம் அரசியல் கதையில் பலரது கவனத்தை ஈர்த்தது. தற்போது குழந்தைகள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் அவர் தனது அடுத்த படத்தை இயக்கி இருக்கிறார்.
நேற்று குழந்தைகள் முன்னேற்ற கழகம் படத்தின் பிரெஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் கலந்துகொள்ள வந்தபோது மாலை 5.45 மணிக்கு இயக்குனர் சங்கர் தயாளுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கொளத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்ற நிலையில், வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். 54 வயதான அவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
The post நிருபர்கள் சந்திப்புக்கு வந்த சினிமா இயக்குனர் திடீர் மரணம் appeared first on Dinakaran.