×

பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம்: போலீசார் நியமிக்க கோரிக்கை

செங்கல்பட்டு: அரசு பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர். எனவே காலை, மாலை என இரு வேலையில் அங்க போலீசார் நியமிக்க ேவண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், மாணவிகள் என பயணம் செய்து வருகின்றனர். செய்யூர், மதுராந்தகம், மேல்மருவத்தூர், உத்திரமேரூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் சிங்கபெருமாள் கோயில், மறைமலைநகர் என பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் இந்த பள்ளிக்கு வருகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் வெளியூர்களில் இருந்து பேருந்து மூலம்தான் வருகின்றனர்.

இதில், நாள்தோறும் மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்தில் உள்ள இடம் இருந்தால் கூட உள்ளே செல்வது கிடையாது மற்றவர்களுக்கு கெத்து காட்ட வேண்டும் என்று ஆபத்தான படிக்கட்டில் பயணம் செய்து வருகின்றனர். பேருந்தில் ஆபத்தான வகையில் படிக்கட்டு மற்றும் ஜன்னலை பிடித்து தொங்கிக்கொண்டும் கால்களை சாலையில் தேய்த்துக்கொண்டும் ஆபத்தை உணராமல் உயிரை பணயம் வைத்து ஆபத்தான வகையில் பயணித்து வருகின்றனர். பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்து விழுகிற நிலையில் செல்வதை காண முடிகிறது.

இதுபோன்ற சம்பவம் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் தொடர்ந்து அறங்கேறி வருகிறது. இதனை தடுக்க போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினமும் காலை, மாலை வேலைகளில் இதுபோன்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.

The post பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம்: போலீசார் நியமிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu Old Bus Station ,Dinakaran ,
× RELATED கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய இருவர் கைது