- மணிகண்டம்
- ஓலையூர் ரிங் ரோடு
- திருச்சி
- கலாமணி
- கல்லுப்பட்டி, மருங்காபுரி
- திருச்சி மாவட்டம்
- மாணிக்கம்
- வேங்கைக்குறிச்சி
- மணப்பாறை…
- தின மலர்
மணிகண்டம்: திருச்சி ஓலையூர் ரிங் ரோடு பகுதியில் இருந்த 25 அடி உயர் மின்னழுத்த கோபுரத்தில் பழுது ஏற்பட்டதாக தெரிகிறது. ஒப்பந்த ஊழியர்களான திருச்சி மாவட்டம் மருங்காபுரி கல்லுப்பட்டியை சேர்ந்த கலாமணி(45) மற்றும் மணப்பாறை வேங்கைகுறிச்சியை சேர்ந்த மாணிக்கம் (32) ஆகியோர் நேற்று காலை 11 மணியளவில் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி, மின் இணைப்பை துண்டிக்காமலே பழுதை சரி செய்து கொண்டு இருந்தனர். அப்போது, திடீரென மின்சாரம் பாய்ந்து மாணிக்கம் தூக்கி வீசப்பட்டார். கலாமணி மின்கம்பியிலேயே சிக்கி இறந்தார். அப்பகுதியினர் மாணிக்கத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கலாமணி சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post பழுதை சரிசெய்தபோது மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர்கள் 2 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.