×

திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பணியாற்றிய 1,000 தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து: கலெக்டர், மேயர் வழங்கினர்

திருவண்ணாமலை, டிச.19: திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு தூய்மை பணியில் ஈடுபட்ட 1,000 தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற தீபத்திருவிழா விமரிசையாக நடந்து முடிந்தது. தீபத்திருவிழாவில் 30 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த 10 நாட்களாக திருவண்ணாமலை நகரை தூய்மையாக பராமரிக்கும் பணியில் திருவண்ணாமலை மாநகராட்சி, சேலம் மாநகராட்சி மற்றும் வேலூர் மாவட்ட நகராட்சிகளை சேர்ந்த சுமார் 1,000 தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.

இரவு பகல் பாராமல் கடும் மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் திருவண்ணாமலை நகரை தூய்மையாக பராமரித்த தூய்மை பணியாளர்களுக்கு திருவண்ணாமலை மாநகராட்சி சார்பில் நேற்று அறுசுவை அசைவ விருந்து வழங்கப்பட்டது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மேயர் நிர்மலா வேல்மாறன் ஆகியோர் விருந்து வழங்கி உபசரித்தனர். மேலும், தூய்மை பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர், நகர நல அலுவலர்கள் உள்ளிட்ட தீபத்திருவிழா பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் திருவண்ணாமலை மாநகராட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதில், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், துணை மேயர் ராஜாங்கம் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவண்ணாமலை தீபத்திருவிழாவில் பணியாற்றிய 1,000 தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து: கலெக்டர், மேயர் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Thiruvannamalai Deepathi festival ,Deepathi festival ,Tiruvannamalai ,Deepathi festival.… ,
× RELATED குப்பநத்தம் அணை வெள்ளத்தில் சிக்கிய 15 ஆடுகள்: தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்