தாந்தோணிமலை அருகே தூக்கு போட்டு முதியவர் தற்கொலை

 

கரூர், டிச. 13: கரூர் தாந்தோணிமலை அருகே வயது முதிர்வு காரணமாக முதியவர் தூக்கு போ ட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் தாந்தோணிமலை அடுத்துள்ள ராயனூர் இலங்கை தமிழர் முகாம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி(80). இவர், கடந்த சில மாதங்களாக வயது முதிர்வு காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

விரக்தியில் இருந்து வந்த அவர், வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் புகாரின் பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தாந்தோணிமலை அருகே தூக்கு போட்டு முதியவர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: