- கரூர் நாமக்கல் புறவழிச்சாலை
- கரூர்
- கரூர் நாமக்கல் பைபாஸ் ரோடு
- நாமக்கல்
- Manmangalam
- தவிட்டப்பாளையம்
- தின மலர்
கரூர், டிச. 16: கரூர் நாமக்கல் பைபாஸ் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் நாமக்கல் இடையே பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியில் இருந்து தவிட்டுப்பாளையம் வரை பைபாஸ் சாலை மாவட்டப் பகுதியில் உள்ளன. இந்நிலையில், தளவாபாளையம், செங்காட்டனுர் போன்ற பல்வேறு பகுதிகளில் உட்கிராம பகுதிகளில் இருந்து மக்கள் பைபாஸ் சாலைக்கு வந்து பல்வேறு பேரூந்துகளில் ஏறிச் செல்லும் வகையில் நிழற்குடை அமைக்கப்பட்டும் பயன்பாட்டில் உள்ளது. இதில், பெரும்பாலான நிழற்குடைகள், அதிக பயன்பாடு காரணமாக பழுதடைந்தும், அசுத்தமாகவும் உள்ளது. இதனால், தற்போதைய நிலையில், பைபாஸ் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும், கிராம மக்களும் இதனை பயன்படுத்திட முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு இதனை தூய்மையாக பராமரிக்க தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
The post கரூர் நாமக்கல் பைபாஸ் சாலையோரம் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.