- கோதுங்கையூர், அயனவரம், ஓட்டரி
- பெரம்பூர்
- கோதுங்கையூர் தாண்டியார்பெட்டி நெடுஞ்சாலை வீதி ஆர்.
- இன்ஸ்பெக்டர்
- சரவணன்
- நகர் சந்தி
- முண்டினம் காவல்துறை
- கோட்டகையூர், அயனவரம்,
- Ottery
- தின மலர்
பெரம்பூர்: கொடுங்கையூர் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை ஆர்.ஆர்.நகர் சந்திப்பு அருகே கஞ்சா விற்கப்படுவதாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நேற்று முன்தினம் போலீசார் அந்த பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து, அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில், 2 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பாண்டிச்சேரி உப்பளம் பகுதியை சேர்ந்த இன்பமணி (37) என்பதும், கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 64வது தெருவை சேர்ந்த முகமது அலி (எ) பாபு (43) என்பவரிடம் கஞ்சா வாங்கி, விற்பனை செய்து வந்தது தெரிந்தது. இதையடுத்து, முகமது அலியையும் கைது செய்தனர்.
* அயனாவரம் பில்கிளிங்டன் சாலையில் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையிலான ேபாலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த ஒருவரை பிடித்து, சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருந்தது. விசாரணையில், அயனாவரம் பகுதியைச் சேர்ந்த தருண் (20) என்பதும், இவர், அயனாவரம் திக்காகுளம் பகுதியை சேர்ந்த உதயவாணி (38) என்பவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து உதயவாணியையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
* ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலை செங்கை சிவம் மேம்பாலம் அருகே, நேற்று காலை ஓட்டேரி இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 3 பேரை மடக்கி சோதனை செய்தபோது, அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கத்தி இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், புளியந்தோப்பு காந்தி நகரை சேர்ந்த செல்வகுமார் (23), புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (எ) கோட்டை மணி (23), மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த சரத்குமார் (28) என்பதும், இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிந்தது. அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
The post கொடுங்கையூர், அயனாவரம், ஓட்டேரியில் 7 கஞ்சா வியாபாரிகள் கைது appeared first on Dinakaran.