×

ஒரே நாடு, ஒரே தேர்தல் அதிபர் ஆட்சிக்கே வழிவகுக்கும்: கனிமொழி எம்.பி. பேட்டி


டெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் அதிபர் ஆட்சிக்கே வழிவகுக்கும் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி ஒன்றிய பா.ஜ.க அரசு இன்று மக்களவையில் ’ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அதில் மசோதாவுக்கு ஆதரவாக 220 வாக்குகளும், எதிராக 149 வாக்குகளும் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, அதனைத் தொடர்ந்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு அனுப்பத் தயார் என ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹ்வால் அறிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; ஒரே நாடு, ஒரே தேர்தல் அதிபர் ஆட்சிக்கே வழிவகுக்கும். மாநில சுயாட்சி, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்டதுதான் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மாநில கட்சிகளை வலுவிழக்கச் செய்யும். முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பக் கூட ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை கொண்டு வந்திருக்கலாம். ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்புவதாக கூறியுள்ளார்கள்.

ஒரே நாடு – ஒரே தேர்தல்” மசோதாவை நிறைவேற்ற போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில், அதனை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை திமுக தொடர்ந்து எதிர்க்கும் என்று உறுதி அளித்துள்ளார்.

The post ஒரே நாடு, ஒரே தேர்தல் அதிபர் ஆட்சிக்கே வழிவகுக்கும்: கனிமொழி எம்.பி. பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kanimozhi M. B. ,Delhi ,Kanimozhi ,Union ,J. The Government ,Lok Sabha ,
× RELATED டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி கனிமொழி 2வது நாளாக நோட்டீஸ்