இதையடுத்து பாயிண்ட் பெயிலியர் மற்றும் சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் அவ்வழியாக மங்களூரில் இருந்து சென்னை செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னை செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ், மைசூரில் இருந்து சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நடுவழியில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் மிகுந்து காணப்பட்டது. அதிகாலை நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இல்லாததால் பயணிகள் பலர் மின்சார ரயில்களில் ஏறி தங்கள் பணிகளுக்கு சென்றனர். இதனால் ரயிலில் கடும் நெரிசல் காணப்பட்டது.
இதையடுத்து அதிகாலை 5.15 மணியளவில் சிக்னல் கோளாறு மற்றும் பாயிண்ட்டை போராடி சரி செய்தனர். தொடர்ந்து சரக்கு ரயில் இயக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் சுமார் 1 மணி நேர தாமதத்திற்கு பின் ஒவ்வொன்றாக இயக்கப்பட்டது. ரயில்கள் தாமதத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். குறித்த நேரத்தில் பல்வேறு இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இந்நிலையில் பாயிண்ட் பெயிலியர் மற்றும் சிக்னலில் கோளாறு ஏற்பட்டது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post அரக்கோணம் அருகே சிக்னல் கோளாறு; சென்னை ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்: பயணிகள் பாதிப்பு appeared first on Dinakaran.