×

தேர்வாணைய தேர்வில் முறைகேடு ஜார்க்கண்டில் போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில தேர்வாணையம் சார்பில் அரசு துறைகளில் இளநிலை பணியாளர் பதவிக்கான தேர்வுகள் கடந்த செப்டம்பரில் நடந்தது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக ஜார்க்கண்ட் மாநில மாணவர் அமைப்பு குற்றம் சாட்டியது. தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் வெற்றி பெற்ற 2,231 பேர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக ஏராளமானோர் தேர்வாணைய அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.

தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளன என்றும் எனவே தேர்வாணைய அலுவலகத்தை இன்று(நேற்று) முற்றுகையிடுவோம் என ஜார்க்கண்ட் மாநில மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் அறிவித்திருந்தனர். இதையொட்டி தேர்வாணைய அலுவலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,தேர்வாணைய அலுவலகம் அருகே நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்ட் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்ற புகார் குறித்து விசாரிக்க 3 உறுப்பினர்கள் கொண்ட குழுவை அரசு நியமித்துள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடந்தன என தேர்வாணையத்தின் செயலாளர் சுதீர் குப்தா தெரிவித்தார்.

The post தேர்வாணைய தேர்வில் முறைகேடு ஜார்க்கண்டில் போராடியவர்கள் மீது போலீஸ் தடியடி appeared first on Dinakaran.

Tags : Jharkhand State Election Commission ,Ranchi ,Jharkhand State Students' Union ,Election Commission… ,Dinakaran ,
× RELATED ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் ஒரு...