சென்னை: சென்னையில் ரூ. 24.8 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அடையாறு ஆற்று சீரமைப்பு பணியை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். மணப்பாக்கம் வழியாக செல்லும் அடையாறு ஆற்றை தூர்வாரி அகலப்படுத்தி, நடைபயிற்சி தளம் அமைக்கும் பணிகள், நீர்வளத்துறை சார்பில் ரூ.24.8 கோடி மதிப்பில் நடந்து வருகிறது.
இந்த பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், குறு சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது ஆலந்தூர் மண்டலகுழு தலைவர் என்.சந்திரன், கவுன்சிலர்கள் செல்வேந்திரன், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
The post அடையாறு ஆறு சீரமைப்பு பணி அமைச்சர்கள் ஆய்வு appeared first on Dinakaran.