×

வாலிபரை தாக்கி பைக், செல்போன் பறிப்பு: இருவர் கைது

பூந்தமல்லி: மாங்காடு கே.கே.நகரை சேர்ந்த சுரேஷ், கடந்த 20ம் தேதி இரவு வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலையில் பைக்கில் சென்றபோது, மற்றொரு பைக்கில் வந்த இருவர் அவரை வழிமறித்து, சரமாரி தாக்கி, செல்போன் மற்றும் பைக்கை பறித்து சென்றனர். இதுகுறித்து சுரேஷ் திருவேற்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு ஆய்வாளர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். அதில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த டிரைவர் மாதவன் (25) மற்றும் 17 வயது சிறுவன் வழிப்பறி செய்தது தெரிந்தது. அவர்களை கைது செய்து, பைக் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post வாலிபரை தாக்கி பைக், செல்போன் பறிப்பு: இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Poonamalli ,Suresh ,Mangadu KK Nagar ,Velappansavadi service ,Suresh Thiruverkadhu… ,Dinakaran ,
× RELATED சாய்பாபா கோயிலில் சிலை, பீடம், கதவுகள் திருட்டு