×

எம்ஜிஆர் நகரில் நள்ளிரவில் பரபரப்பு இளம்பெண்களை வைத்து பாரில் ஆபாச நடனம்: 5 பேர் கைது

பூந்தமல்லி: சென்னை எம்ஜிஆர் நகரில் இயங்கி வரும் தனியார் பார் ஒன்றில், விதிகளை மீறி இளம்பெண்களை வைத்து அரைகுறை ஆடைகளுடன் நடன நிகழ்ச்சி நடத்தப்படுவதாக, எம்ஜிஆர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த 13ம் தேதி போலீசார் அந்த பாரில் வாடிக்கையாளர்கள் போல் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பாரில் விதிகளை மீறி இளம்பெண்கள் ஆபாச நடனமாடுவதும், அவர்கள் மீது ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டு வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தியதும் தெரியவந்தது.

மேலும், சோதனை நடத்த சென்ற இடத்தில் பார் ஊழியர்களான கிழக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த தானு (47), விருதுநகர் மாவட்டம் சிவகாசி கிழக்கு பகுதியை சேர்ந்த விஜய் அமிர்தராஜ் (38), விருதுநகர் மாவட்டம் தொப்பலாகரையை சேர்ந்த கோடிஷ் (26), எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (22) ஆகியோர் போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து, போலீசார் தகராறில் ஈடுபட்ட 5 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 பார்ட்டி கார்டுகள், ரூ.6,100 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post எம்ஜிஆர் நகரில் நள்ளிரவில் பரபரப்பு இளம்பெண்களை வைத்து பாரில் ஆபாச நடனம்: 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags :
× RELATED தொழிற்சாலை மேலாளரை மிரட்ட கைத்துப்பாக்கியுடன் வந்த வடமாநில இளைஞர் கைது