- பாட்டினபாகம்
- மயிலாப்பூர் எம்.எல்.ஏ
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- மயிலாப்பூர்
- நகராட்சி வீட்டு வசதி மேம்பாட்டு வாரியம்
- சீனிவாசபுரம்
- வேலு
- தின மலர்
சென்னை: பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத் தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பழுதடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு அதே இடத்தில் அனைத்து மக்களுக்கும் புதிதாக வீடு கட்டித் தர வேண்டும் என்று, மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலுவை சந்தித்து குடியிருப்புவாசிகள் கோரிக்கை மனு அளித்தனர். மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ மயிலை த.வேலுவை, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் அனைத்து மக்கள் நல கூட்டமைப்பு தலைவர் முகமது முஹம்மது ஜஹிர், செயலாளர் ஜெரால்டு, பொருளாளர் கனிஜான்சன் மற்றும் பொதுமக்கள் நேற்று சந்தித்து, கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: பட்டினப்பாக்கம் சீனிவாசபுரததில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் பழுதடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு, மீண்டும் அதே இடத்தில் அனைத்து மக்களுக்கும் புதிதாக வீடு கட்டித் தர வேண்டும்.
அதுவரை தற்காலிக வீடு தர வேண்டும். சீனிவாசபுரத்தில் உள்ள எங்களது வீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட வீடுகள் என்பதால் புதிய வீடு கட்டிதரும்போது எங்களிடமிருந்து எந்த தொகையும் பெறாமல் அரசு வீடு வழங்க வேண்டும். எங்களுக்கான வீட்டின் அளவு 450 சதுர அடியில் அமைத்துத் தர வேண்டும். 4 மாடிகளுக்கு மிகாமல் ஜி+3 அமைப்பில் கட்டப்பட வேண்டும். குடிசை வீட்டில் வசிப்பவர்களுக்கும், இதே திட்ட பகுதியில் வீடுகளை கட்டித்த தர வேண்டும். வாரிசு வீடு விவகாரத்தில் அனைத்து சமுதாய மக்களுக்கும் நடுநிலையாக அரசு அறிவிக்க வேண்டும். சீனிவாசபுரத்தில் உள்ள அனைத்து கடைகள் சம்பந்தமான வியாபாரிகள் சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றிதர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பட்டினப்பாக்கத்தில் பழைய குடியிருப்புகளை இடித்து அதே இடத்தில் புதிதாக வீடு கட்டித்தர வேண்டும்: மயிலாப்பூர் எம்எல்ஏவை சந்தித்து குடியிருப்புவாசிகள் கோரிக்கை appeared first on Dinakaran.