தாம்பரம்: ஒன்றிய அரசின் விவசாயிகளுக்கான எதிரான செயல்பாட்டை கண்டித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பில், பொதுச் செயலாளர் வி.கே.துரைசாமி தலைமையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் விவசாயிகள் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அப்போது வி.ஆர்.துரைசாமி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆட்சி அமையும் முன்னர் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய பாஜ, ஆட்சி அமைந்தவுடன் எதிராகவும், அடக்குமுறையை கையாள்கிறது.விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும். வேளாண்மைகான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெறவேண்டும். விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்திட வேண்டும். எம்.எஸ்.பி கேட்டு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜெக்ஜித் சிங் டல்லேவால் அழைத்து பேச்சு வார்த்தை நடத்திட வேண்டும்,’’ என்றார்.
The post ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல் appeared first on Dinakaran.