சென்னை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்படி, நீரிழிவு நோய் இந்தியாவில் வளர்ந்து வரும் தொற்றுநோயாக உள்ளது. 10 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நீரிழிவு நோயால் உணர்வின்மை, இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை இரண்டு முதல் நான்கு மடங்கு வரை அதிகரிக்கும். இந்நிலையில், அதிகரித்து வரும் நீரிழிவு நோயை குறைப்பதற்கு நீரிழிவு சிகிச்சை மையத்தை காவேரி மருத்துவமனை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக காவேரி மருத்துவமனையின் மூத்த நீரிழிவு மருத்துவர் பரணீதரன் கூறியதாவது: நீரிழிவு நோய் ஒரு உறுப்பை மட்டும் பாதிக்காது, முழு உடலையும் பாதிக்கும்.
மேலும் அதன் சிக்கல்கள் வாழ்க்கைத் தரத்தை கணிசமாக குறைக்கும். காவேரி மருத்துவ மனையில் இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டிய அவசர தேவையை நாங்கள் உணர்கிறோம். எங்களின் சிறப்பு மையம், ஆரம்ப காலத்திலேயே தலையிட்டு, சிறப்பான சிகிச்சை மற்றும் நீண்டகால சேதத்தை தடுப்பதில் உரிய கவனம் செலுத்தும். மேலும் பல தரப்பட்ட, நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலான அணுகுமுறையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். தனிநபர்கள் தங்கள் ஆரோக்கியத்தை திறம்பட நிர்வகிப்பதற்கும் முழுமையான வாழ்க்கையை வாழ்வதற்கும் அதிகாரம் அளிப்பதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு இந்த மையம் ஒரு சான்றாகும்.
சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான மேம்பட்ட நோயறிதல், தனிப்பட்ட சிகிச்சை திட்டங்கள், நீரிழிவு நோயால் கால்களில் ஏற்படும் புண்களுக்கான காயங்களை பராமரிப்பது, ஆரோக்கியமான சிறுநீரகத்திற்கான சிறுநீரகவியல் சேவைகள் மற்றும் இதய மற்றும் நரம்பியல் பிரச்னைகளை நிர்வகிப்பதற்கான இலக்கு சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்த மையம் வழங்கும். அனுபவம் வாய்ந்த உணவியல் நிபுணர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகள் அடங்கிய குழு நோயாளிகளுடன் இணைந்து நிலையான வாழ்க்கை முறை மாற்றங்களை மேம்படுத்தி, ஆரோக்கிய விளைவுகளை உறுதி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
The post காவேரி மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிக்கல்களை நிர்வகிக்கும் சிறப்பு சிகிச்சை மையம் தொடக்கம் appeared first on Dinakaran.