×

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் செல்போன் பணம் திருடியவர் சிக்கினார்

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் பணம், செல்போன்களை தொடர்ச்சியாக திருடி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். பாலவாக்கம் முத்து மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மதுரை (48). இவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 11ம் தேதி மதுரை தனது படுக்கையில் செல்போனை வைத்துவிட்டு தூங்கியுள்ளார். சிறிது நேரத்தில் எழுந்து பார்த்த போது செல்போன் மாயமானது.

இதுகுறித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, ராயப்பேட்டை உசேன் நகர் பகுதியை சேர்ந்த முகமது ஜாவித் (23) என்ற பழைய குற்றவாளி செல்போனை திருடியது தெரியவந்தது. இவர் மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர் போல் நடித்து தொடர் செல்போன் மற்றும் பணம் திருடி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் முகமது ஜாவித்தை கைது செய்தனர். அவனிடம் இருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

The post ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் செல்போன் பணம் திருடியவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Royapettah Government Hospital ,Chennai ,Madurai ,Muthu Mariamman Koil Street, Palavakkam ,
× RELATED ஏற்காட்டில் இருந்து சென்னை, மதுரைக்கு நேரடி பேருந்து சேவை தொடக்கம்..!!