புழல்: புழல் காவாங்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்தில் போலீசார் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, புழல் காவாங்கரை, பாரதிதாசன் தெருவை சேர்ந்த விஜய் (எ) விஜயகுமார் (34) கஞ்சா விற்றது தெரிந்தது.
அவரை கைது செய்தனர். இவர் பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகளில் கைதாகி சிறைக்கு சென்றவர் என்பதும் தெரியவந்தது. அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் ₹7 லட்சம் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கைதான விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.