×

சிலை வடிவமைப்பு கடையில் 7 லேப்டாப், 4 செல்போன் திருட்டு

பெரம்பூர்: சென்னை மாதவரம் திருமலை நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (32). கொளத்தூர் யுனைடெட் காலனி செங்குன்றம் நெடுஞ்சாலை பகுதியில் தத்ரூப சிலை வடிவமைப்பு நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி இரவு 8 மணி அளவில் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை நிறுவனத்தில் வேலை செய்யும் லோகேஸ்வரி என்பவர் வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 7 லேப்டாப், 4 செல்போன்கள் உள்ளிட்டவை காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், ஏற்கனவே சில குற்ற வழக்குகளில் தொடர்புடைய தாம்பரம் முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த பரோஸ் பாஷா (29) மற்றும் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நிஜாமுதீன் (27) ஆகிய இருவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதைடுத்து நேற்று அவர்களை கைது செய்த கொளத்தூர் போலீசார் இருவரிடம் இருந்து 6 லேப்டாப், 3 செல்போன் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த கொளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சிலை வடிவமைப்பு கடையில் 7 லேப்டாப், 4 செல்போன் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Subramani ,Thirumalai Nagar 2nd Street, Madhavaram, Chennai ,United Colony Chengunram Highway ,Kolathur ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவரின்...