அதனால் 400 பயணிகளும் துருக்கியில் சிக்கிக் கொண்டனர். தொடர் முயற்சிக்கு பின்னர் தனித்தனி விமானங்களில் அவர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 200 பயணிகளுடன் புறப்பட்ட ஒரு விமானம் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு டெல்லி வந்தடைந்தது. அதேபோல் இரண்டாவது விமானம் நேற்று அதிகாலை மும்பை விமான நிலையத்தில் 200 பயணிகளுடன் தரையிறங்கியது.
மேலும், இண்டிகோ விமானம் சர்வர் செயலிழந்திருப்பது குறித்து டெல்லியின் ஐஜிஐ விமான நிலைய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். துருக்கியில் இருந்து தாயகத்திற்குத் திரும்பிய பயணிகளின் முகத்தில் மகிழ்ச்சியடைந்தனர்.
The post கடந்த 4 நாட்களாக துருக்கியில் தவித்த 400 விமான பயணிகள் மீட்பு appeared first on Dinakaran.