- வழி
- கல்லிப்பாளையம் ஊராட்சி
- பல்லடம்
- பொங்கலூர் ஒன்றியம் வே
- பல்லாடியம்
- கல்லிப்பாளையம் ஓராட்சி
- ஓரடி
- சாந்தினி சம்பத்குமார்
- கே. மக்கள் சந்தை எஸ்.
- கே
- சம்பத் குமார்
- மக்கள் சந்தை
- கல்லிப்பாளையம் ஊராட்சி
பல்லடம், டிச.16: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் வே.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் மக்கள் சந்தை நேற்று தொடங்கியது. துவக்க விழாவிற்கு ஊராட்சி தலைவர் சாந்தினி சம்பத்குமார் தலைமை வகித்தார். மக்கள் சந்தையை கே.எஸ்.கே.பவுண்டேசன் நிறுவனர் சம்பத்குமார் வழிபாடு நடத்தி துவக்கி வைத்தார். நிகழ்வில் திருஞானசம்பந்தம், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து வே.கள்ளிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி சம்பத்குமார் கூறியதாவது: கள்ளிப்பாளையம் ஊராட்சி பகுதியில் பெரும்பாலும் விவசாயிகளே அதிக அளவில் உள்ளனர். அவர்கள் விளைவிக்கும் காய்கறிகளை பல்லடம், திருப்பூருக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு போக்குவரத்து செலவு அதிகமாகின்றது. இதன் மூலம் சில சமயங்களில் மட்டுமே லாபம் கிடைக்கிறது. பல சமயங்களில் விளைவித்த காய்கறிகள் மூலம் கிடைக்கும் வருவாய் போக்குவரத்து செலவுக்கே சரியாகி விடுகிறது.
இதனை கருத்தில் கொண்டு கள்ளிப்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு மக்கள் சந்தை செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மக்கள் சந்தை செயல்படும். இதில் விவசாயிகள் தங்களது விளை பொருட்கள் மற்றும் நாட்டுக்கோழி, ஆடு போன்ற கால்நடைகளையும் விற்பனை செய்து கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் சுத்தமான, தரமான காய்கறிகள், சிறுதானியங்கள், நாட்டுக்கோழி உள்ளிட்ட பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கிக் கொள்ளலாம். இதன் மூலம் விவசாயிகளும் பயன்பெறுவார்கள், பொதுமக்களுக்கும் தரமான பொருட்கள் கிடைக்கும்.
The post வே.கள்ளிப்பாளையம் ஊராட்சியில் மக்கள் சந்தை தொடங்கியது appeared first on Dinakaran.