×

போதையில் ரகளை செய்தவர் கைது

திருபுவனை, டிச. 8:புதுச்சேரி- விழுப்புரம் மெயின் ரோடு மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பு அருகே போதையில் ஒரு நபர், அவ்வழியாக செல்லும் மக்களை தரக்குறைவாக திட்டி ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள், திருபுவனை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், ரகளையில் ஈடுபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் அவர், வளவனூர் அடுத்துள்ள கெங்கராம்பாளையம் பகுதியை சேர்ந்த வீரப்பன் (42) என தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

The post போதையில் ரகளை செய்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupuvanai ,Puducherry-Villupuram ,Thiruphuvanai ,
× RELATED திருபுவனை நான்குமுனை சந்திப்பு...