×

ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர், டிச.13: கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பாக நேற்று மங்கலம் பெரியபுத்தூர் ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ரேஷன் கடைகளில் பாமாயிலை தடை செய்துவிட்டு தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும். அதேபோல் சத்துணவுக்கூடங்களிலும் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மாவட்ட தலைவர் ஈஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி, அவிநாசி ஒன்றிய செயலாளர் ராஜகோபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Mangalam Periyaputhur ration ,Tamil Nadu Farmers' Association ,Airmunai Youth Wing ,Dinakaran ,
× RELATED திருப்பூர் புதிய பேருந்து நிலையம்...