முன்னதாக டிசம்பர் 16ம் தேதி நிகழ்ச்சி நிரலில் இந்த மசோதா இடம்பெற்றிருந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கடுமையான ஆட்சேபனையால் திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை. ஆனால், அதேசமயம் இந்த கூட்டத் தொடரிலேயே இம்மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சட்ட முன்வரைவை அறிமுக நிலையிலேயே அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருசேர எதிர்க்க வேண்டியது அவசியமாகும்.
ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் அனைத்து சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறுமானால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என பல்வேறு சவால்கள் குறுக்கிடும் நிலை ஏற்படும். சர்வதேச ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியுள்ள அதானியை கைது செய்து விசாரிக்க வேண்டுமென நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரலெழுப்பி வரும் நிலையில், அதானியை பாதுகாக்கவும், இப்பிரச்சனையை திசை திருப்பும் நோக்கோடும் ஒன்றிய பாஜ அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்யவுள்ளது.
நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், இந்தியாவின் மகத்தான பன்முகத்தன்மையையும் சிதைக்கும் ஒன்றிய மோடி அரசின் நடவடிக்கைகளை சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்) லிபரசேன் ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டிப்பதோடு, ஒரே நாடு, ஒரே தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து வலுவான கண்டனக் குரலெழுப்பிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post ஒரே நாடு, ஒரே தேர்தல் விபரீத மசோதாவை அறிமுக நிலையிலேயே தடுத்திட வேண்டும்: இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.