இதையடுத்து, கடந்த 2013-ல் நடைபெற்ற தேர்தலில் எஸ்.ஆர்.எம்.யு. வெற்றி பெற்றது. இதன்பிறகு, பல காரணங்களால் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. இதற்கிடையே, 11 ஆண்டுகளுக்குப் பிறகு, ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் டிச. 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தெற்கு ரயில்வேயில் தட்ஷிண ரயில்வே ஊழியர்கள் சங்கம், தட்ஷிண ரயில்வே கார்மிக் சங்கம், ரயில் மஸ்தூர் யூனியன், தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆகிய தொழிற்சங்கங்கள் தேர்தலில் போட்டியிட்டன.
தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 ரயில்வே கோட்டங்களில் 140 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் தபால் ஓட்டுகள் தவிர்த்து, 88.91 சதவீதம் ஓட்டு பதிவாகின. இந்நிலையில், 6 கோட்டங்களில் 11 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. சென்னை, திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட கோட்டங்களில் டிஆர்இயு சங்கமும், மதுரை, திருச்சி உள்ளிட்ட கோட்டங்களில் எஸ்ஆர்எம்யு சங்கமும், சேலத்தில் எஸ்ஆர்இஎஸ் சங்கமும் முன்னிலை வகித்தன. இதில், எஸ்.ஆர்.எம்.யு 26,132 ஓட்டுகளும், டி.ஆர்.இ.யு 25,815 ஓட்டுகளும் பெற்றிருந்தன.
அதாவது, வாக்களிக்கப்பட்ட ஓட்டுகளில் எஸ்ஆர்எம்யு 34 சதவீத ஓட்டுகளையும், டிஆர்இயு 33.67 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருந்தன. மொத்த வாக்காளர்களில், 23 ஆயிரம் ஓட்டுகளை (30 சதவீத ஓட்டுகளை) பெறும் சங்கத்துக்கு ரயில்வே அங்கீகாரம் கிடைக்கும். அந்த வகையில், இந்த 2 சங்கங்களும் 25 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்று, அங்கீகாரம் பெற்றன. அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் 5 ஆண்டுகளுக்கு பொறுப்பில் இருக்கும். ரயில்வே தொழிலாளர்களின் பிரச்னை உள்பட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக நிர்வாகத்துடன் நேரடியாக இவை பேச்சுவார்த்தையில் பங்கேற்கும்.
The post ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் எஸ்ஆர்எம்யு., டிஆர்இயு சங்கங்கள் அங்கீகார தொழிற்சங்கங்களாகத் தேர்வு: 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெற்றது appeared first on Dinakaran.