- யூனியன் அரசு
- நாகர்கோவில்
- சபாநாயகர்
- Appavu
- தமிழ்நாடு அரசு
- தென்காசி
- திருநெல்வேலி
- தூத்துக்குடி
- தின மலர்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: தென் மாவட்டத்தில் தற்போது அதிக மழை பெய்து வருகிறது. தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் தேவையான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்து இருக்கிறது.
அமைச்சர்கள் முகாமிட்டு தொடர்ந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 24 மணி நேரமும் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றி வருகிறார். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாடு தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு பேரிடர் சிறப்பு நிதியை கொடுக்க மறுக்கிறது.
இவ்வாறு கூறினார்.
The post ‘பேரிடர் சிறப்பு நிதியை கொடுக்க ஒன்றிய அரசு மறுக்கிறது’ appeared first on Dinakaran.