×

வருகிற 18ம் தேதி நடைபெற இருந்த திமுக தலைமை செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: வருகிற 18ம் தேதி நடைபெற இருந்த திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தற்போது நடந்துகொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாலும், வருகிற 18ம் தேதி சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post வருகிற 18ம் தேதி நடைபெற இருந்த திமுக தலைமை செயற்குழு கூட்டம் ஒத்திவைப்பு: துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Durai Murugan ,Chennai ,general secretary ,Tamil Nadu ,DMK… ,Dinakaran ,
× RELATED ஃபெஞ்சல் புயலினால் பாசன...