×

மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று 350க்கும் அதிகமான விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. நேற்று பகல் 12 மணியளவில் ஒலைக்குடா கடல் முதல் தனுஷ்கோடி கடல் வரை பரவலாக மீனவர்கள் மீன்பிடிக்க வலைகளை கடலுக்குள் இறக்கினர். மதியம் ஒரு மணி அளவில் இலங்கை கடற்படையினர், ரோந்து படகில் வந்து மீனவர்களை அச்சுறுத்தியுள்ளனர். இதனையடுத்து மீனவர்கள் மீன் பிடிக்காமல் வேறு பகுதிக்குச் சென்றனர்.

இதுகுறித்து கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், ‘‘இலங்கை கடற்படை திட்டமிட்டு கைது செய்வதற்காக நவீன ரோந்து படகில் சுற்றி வந்தனர். மேலும் எல்லையோரம் மீன் பிடித்துக் கொண்டிருந்த படகுகளை முட்டி மூழ்கடிக்கும் நோக்கத்தில் விரட்டினர். இதில் சில படகுகள் மீன்வலைகளை வெட்டிவிட்டு இலங்கை கடற்படையிடம் சிக்காமல் தப்பினர். இதனைக் கண்ட நாங்களும் மீன்பிடிக்காமல் இரவோடு இரவாக அச்சத்துடன் கரை திரும்பினோம்.’’ என்றனர்.

 

The post மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,Rameswaram ,Olaikudda ,Dhanushkodi ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் கைது...