தஞ்சாவூர்: தஞ்சாவூர் கொள்ளிடம் ஆற்றில் நள்ளிரவில் நீர் திறக்க உள்ளதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவிந்தநாட்டுசேரி ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட கரையோர மக்கள் வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பட்டுக்குடி, கூடலூர், புத்தூர் கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.