கனமழை எச்சரிக்கை எதிரொலி: டிச.18ம் தேதி சென்னையில் நடைபெற இருந்த திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

சென்னை : வரும் 18ம் தேதி நடைபெற இருந்த திமுக செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கனமழை எச்சரிக்கையாலும், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளதாலும் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக வெள்ளமும் பல இடங்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. 18-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை தொடர்ச்சியாக பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அலர்ட் கொடுத்திருந்தது. குறிப்பாக, டிசம்பர் 18-ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வரும் 18ம் தேதி நடைபெற இருந்த திமுக செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நாடாளுமன்றத் கூட்டத் தொடரில் நமது கட்சி உறுப்பினர்கள் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாலும், 18.12.2024 அன்று சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட தி.மு.க. தலைமைச் செயற்குழுக் கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்படுகிறது. திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

The post கனமழை எச்சரிக்கை எதிரொலி: டிச.18ம் தேதி சென்னையில் நடைபெற இருந்த திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: