×

மாமல்லபுரம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்


மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடலில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 4 மாதங்களில் சீதோஷ்ணநிலை காணப்படும். அப்போது, ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் சீதோஷ்ண நிலைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அடிக்கடி இறந்து கரை ஒதுங்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை மாமல்லபுரம் கடற்கரையில் தனியார் ரிசார்ட்டுக்கு அருகே சுமார் 1 கிமீ தொலைவு வரை ஆங்காங்கே 5 கிலோ எடை கொண்ட 10க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியது. இதனால், மீனவர்கள் அச்சமடைந்தனர்.

மேலும், 10க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதால் கடற்கரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, மீனவர்கள் கூறுகையில், நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி ஆகிய 4 மாதங்கள் கடல் சீதோஷ்ன நிலையில் இருக்கும். அந்த நேரத்தில், கடலில் கலக்கும் நச்சுத்தன்மை உள்ள கழிவுகள், கடலில் அடித்து வரப்படும் குப்பை கழிவுகள், லாஞ்சர் மற்றும் பெரிய பெரிய கப்பலில் இருந்து வெளியேறும் ஆயில் கழிவுகளை ஆமைகள் உண்ணும் போது, அதில் நச்சுத்தன்மை அதிகளவில் கலந்திருப்பதால் ஏராளமான ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவதாக கூறப்படுகிறது.

The post மாமல்லபுரம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram beach ,Mamallapuram ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயிலை கண்டு ரசித்த ஒன்றிய தேர்தல் அதிகாரி