×

ஒரத்தூர் நீர்த்தேக்கத்தின் தற்காலிக கரை 2வது முறையாக உடைந்தது


ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் ஒரத்தூர், ஆரம்பாக்கம் ஆகிய 2 கிராமங்களின் ஏரியையும் சுமார் 760 ஏக்கர் பரப்பளவில் ஒன்றிணைத்து ₹60 கோடி மதிப்பில் நீர்த்தேக்கம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நீர்தேகத்தின் மூலம், 1 டி.எம்.சி., தண்ணீர் சேமித்து வைக்க முடியும். அதேபோல, சென்னை புறநகர் பகுதிகளான வரதராஜபுரம், முடிச்சூர் பகுதியில் ஏற்படும் வெள்ள பாதிப்பை தடுக்க முடியும். நீர்த்தேக்கத்திற்கு அருகே பட்டா நிலங்கள் கையகப்படுத்தாததால் நீர்த்தேக்கத்தின் ஒரு புறம், கரை அமைக்காமல், ஐந்து ஆண்டுகளாக நீர்த்தேக்கத்தின் பணி 80 சதவீதம் நிறைவடைந்து.

இத்திட்டம் கிடப்பில் உள்ளது. அண்மையில் பெய்த கனமழையால் நீர்த்தேக்கத்தில் நீர் நிரம்பி உள்ளது. தற்போது நீர்த்தகத்தின் தற்காலிக கரை, கடந்தாண்டு உடைந்த அதே இடத்தில் மீண்டும் 2வது முறையாக உடைந்துள்ளது. இதனால், பல நூறு கன அடி நீர் வீணாக வெளியேறி வருகிறது. இதேபோன்று சென்ற மழைக்கும், தற்காலிக கரை உடைந்து விளைநிலங்கள் சேதமடைந்தன. இதனால், விளைநிலங்களில் பயிரிடுவதை இம்முறை விவசாயிகள் கைவிட்டுள்ளனர். எனவே நீர்த்தேக்கத்தின் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

The post ஒரத்தூர் நீர்த்தேக்கத்தின் தற்காலிக கரை 2வது முறையாக உடைந்தது appeared first on Dinakaran.

Tags : Orathur reservoir ,Sriperumbudur ,Orathur ,Arambakkam ,Kundrathur ,Kanchipuram district ,
× RELATED லாரியில் இருந்து கொட்டியதால்...