ஊட்டி : ஊட்டியில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தொட்டபெட்டா மலையில் மேக மூட்டம், சாரல் மழை, கடும் குளிர் நிலவுகிறது. இதனை பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.
அங்குகள் மலை முகடு, மலைகள் மற்றும் மரங்களின் நடுவே தவழ்ந்து வரும் மேக கூட்டத்திற்கு இடையே நின்று புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதேசமயம் கடும் மேக மூட்டம் நிலவியதால் டெலஸ்கோப் மூலம் இயற்கை அழகை காண முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
The post குளிரை பொருட்படுத்தாமல் தொட்டபெட்டாவில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.