சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.ஏ.சித்திக், இ.ஆ.ப., மற்றும் திட்ட இயக்குனர் திரு.தி.அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக தலைமை பொது மேலாளர்கள் திருமதி. ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), மற்றும் திரு. டி.லிவிங்ஸ்டோன் எலியாசர், (திட்டம் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), Jones Lang Lasalle Property Consultants India நிறுவனத்தின் இயக்குநர் திரு.சைமன் செல்வராஜ் (மூலோபாய ஆலோசனைத் தலைவர்) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ஆலோசகர் குழுக்கள் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஆலந்தூர், ஆலப்பாக்கம் சந்திப்பு, போட் கிளப், நந்தனம் மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய இடங்களில் வணிக வளர்ச்சிக்கான முக்கிய இடங்களைக் கண்டறிந்து பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து கூடுதல் வருவாயை ஈட்டுவதற்கான முயற்சிகளை திட்டமிட்டுள்ளது.
கட்டம் 2-ல் ஆலப்பாக்கம் மெட்ரோ இரயில் நிலையத்தின் நுழைவு மற்றும் வெளியேறுதல் நடைபாதை மேம்பாலத்துடன் ஒருங்கிணைக்கப்படும். நந்தனம் வணிக மேம்பாடு வரவிருக்கும் கட்டம்-2 சுரங்கப்பாதை மெட்ரோ இரயில் நிலையத்துடன் ஒருங்கிணைக்கப்படும். ஆலந்தூர் வணிக மேம்பாடு கட்டம் 1 மற்றும் கட்டம் 2 மெட்ரோ இரயில் நிலையங்களுடன் ஒருங்கிணைக்கப்படும். விம்கோ நகர் பணிமனை நிலையம், தற்போதுள்ள மெட்ரோ கட்டிடத்திற்கு மேல் 8 மாடிகளில் கொண்ட வணிக மேம்பாட்டு கட்டுமானத்தை கொண்டிருக்கும். ஏற்பு கடிதம் வழங்கப்பட்ட 150 நாட்களில் விரிவான திட்ட அறிக்கை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: ரூ.67.2 லட்சம் மதிப்பில் வணிக மேம்பாட்டிற்கான கட்டுமானத்திற்கு தேவையான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் appeared first on Dinakaran.