விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றங் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. உடமைகளையும் கால்நடைகளையும் மேடான பகுதிக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.