தேவையானவை:
புளிப்பான குண்டு மாங்காய் – 2,
வெல்லம் – 1 பெரிய உருண்டை,
பச்சைமிளகாய் – 5,
உப்பு – சிட்டிகை,
நெய் – 2 டீஸ்பூன்.
கடுகு, மஞ்சள் பொடி – தாளிக்க.
செய்முறை:
மாங்காயின் தோல் சீவி, செதில் செதிலாகச் சீவி எடுக்கவும். பச்சைமிளகாய் நடுவில் கீறவும். வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, மஞ்சள் பொடி, பச்சைமிளகாய், மாங்காய், உப்புச் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, வெல்லம் சேர்த்துக் கொதிக்க விடவும். மாங்காய் துண்டு வெந்து ஜாம் பதம் வந்ததும் இறக்கவும். சப்பாத்தி, தோசை, பிரெட்டுக்குத் தொட்டுக் கொள்ள கட்டா மிட்டா ஜாம் சூப்பரோ சூப்பர்.
The post கட்டா மிட்டா ஜாம் appeared first on Dinakaran.