- சபா
- கோவா மோபிரிபாளையம்
- சூலூர்
- மோப்ரிபாளையம் மாநகரம்
- சூலூர்
- மனித உரிமைகள் தினம்
- ராமானுஜம், மோப்பரிபாளையம்
- சந்தித்தல்
- கோவா மோப்ரிபாளையம்
- தின மலர்
சூலூர், டிச.11: சூலூர் அருகே உள்ள மோப்பிரிபாளையம் பேரூராட்சி சார்பில் வருடத்திற்கு நான்கு முறை பகுதி சபா கூட்டம் நடைபெறுவது வழக்கம். நேற்று மனித உரிமைகள் தினத்தையோட்டி மோப்பரிபாளையம் ராமானுஜம் நகரில் பகுதி சபா கூட்டம் நடந்தது. இதில், அந்த பகுதிகளில் இருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய தேவைகளையும், பேரூராட்சி செய்ய வேண்டிய பணிகளையும் எடுத்துக்கூறினர்.
பேரூராட்சி சார்பில் தலைமை எழுத்தர் சாமிநாதன் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். வரும் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கைகளை தீர்மானமாக வைத்து நிறைவேற்றப்பட்டு மக்களுக்கு தேவையானதை செய்து கொடுக்க முடியும் என தெரிவித்தார்.
The post கோவை மோப்பிரிபாளையத்தில் பகுதி சபா கூட்டம் appeared first on Dinakaran.