×

கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்: கலெக்டர் தகவல்

 

கோவை, டிச.24: பயோமெடிக்கல் கழிவுகள் கொட்டுதல், சட்ட விரோதமாக விலங்குகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்திட, கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேரளவில் இருந்து தமிழ்நாட்டின் எல்லைக்குள் பயோமெடிக்கல் கழிவுகள் கொட்டுதல், சட்ட விரோதமாக விலங்குகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்திட கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச் சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பாக கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் போக்குவரத்து மற்றும் மற்றும் பயோமெடிக்கல் கழிவுகள் கொட்டப்படுவதை கண்காணித்திடவும், இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுத்திடவும், சார் ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர்கள் தங்களது கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து சுழற்சி முறையில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள், தரகர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தமிழக எல்லையிலிருந்து விலங்குகள் கொண்டும் செல்லும்போது, உரிய மருத்துவரின் சான்று பெற்றும், உரிய வழிமுறைகளைப் பின்பற்றியும் விலங்குகள் வாகனம் மூலமாக கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்களால் திடீர் தணிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோவை மாவட்டத்தில் உள்ள 14 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Goa district ,KOWAI ,KOWAI DISTRICT ,KRANTIKUMAR BODI ,Dinakaran ,
× RELATED கோவை வரப்பாளையத்தில் தாயை இழந்த...