×

முதல்வருக்கு வரவேற்பு ரெப்கோ வங்கியின் வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை, டிச. 20: ரெப்கோ வங்கியின் கோவை ராமநாதபுரம் கிளை சார்பாக ‘வாடிக்கையாளர் சந்திப்பு’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வங்கியின் துணைப் பொது மேலாளர் செளதாமினி பேசுகையில், ரெப்கோ வங்கி துவங்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆகின்றது. இதனையொட்டி டெபாசிட் சிறப்பு திட்டமாக மூத்த குடிமக்களின் வைப்பு தொகைகளுக்கு 8.75 சதவீதமும், மற்றவர்களுக்கு 8.25 சதவீதம் வட்டி வழங்குவதுடன் மகளிருக்கு 8 சதவீதம் வழங்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு நகைக்கடனாக உச்ச வரம்பின்றி குறைந்த வட்டியில் கிராமிற்கு ரூ.5600 வரை வழங்கப்படுகிறது. இதேபோல அசையா சொத்துக்களின் பேரில் குறைந்த வட்டியில் அடமானக்கடன் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் இவ்வங்கியின் உதவி மேலாளர்கள் ரேவதி, அஷ்வினி மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post முதல்வருக்கு வரவேற்பு ரெப்கோ வங்கியின் வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Repco Bank ,Coimbatore ,Ramanathapuram ,Deputy General Manager ,Soudamini ,Dinakaran ,
× RELATED தென் மாவட்டங்களில் கனமழை.. ...